வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்

வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்

திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு உண்டானது.

திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு உண்டானது.

மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறையின் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி ஒன்றிய கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அறை முன்பு வாயில் கருப்பு துணியுடன் அமர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தர்ணாவில் ஈடுபட்ட விரகனூர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபா ராஜன் இந்த சம்பவத்தால் திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விரகனுார் ஊராட்சி பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளா வில்லை எனவும் மேலும் இன்று விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா விடம் நேரிடையாக புகார் செய்து பகுதிகளை ஆய்வு செய்ய அழைத்துள்ளார். அதற்கு அவர் கண்டு கொள்ளாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டதாகவும் இதனால் பார்த்திபன் நேரடியாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அறையின் வாசலில் அமர்ந்து கருப்பு துணியை வாயில் கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அறையின் வாசலில் உட்கார்ந்த அவரை அதிகாரிகள் வந்து அவ்வப்போது பார்த்து விட்டு சென்றனர் அவருடன் யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் தனது தொலைபேசியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் குழு தலைவர் ஒன்றிய கவுன்சிலர் நிலையூர்முருகனுக்கு தகவல் தெரிவித்தார் உடனே சம்பவ இடத்திற்கு வந்த முருகன் பார்த்திபராஜாவிடம் சமாதானம் பேசி பின்னர் அலுவலர் பேராட்சி பிரேமாவிடமும் தங்களது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பின்னர் மாலை 5 மணிக்கு தான் நேரில் சென்று அந்த பகுதியில் ஆய்வு செய்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா உறுதி அளிக்கவே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன் ராஜன் அங்கிருந்து சென்றார். தங்களது பகுதியில் அடிப்படை கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத வட்டார வளர்ச்சி அலுவலரின் அலுவலக அறையின் வாசலில் அமர்ந்து வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story