குடும்பத்துடன் உள்ளிருப்பு  போராட்டம் நடத்திய ஒன்றிய கவுன்சிலர்

குடும்பத்துடன் உள்ளிருப்பு  போராட்டம் நடத்திய ஒன்றிய கவுன்சிலர்
ஊராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஒன்றிய கவுன்சிலர்
பூதப்பாண்டி அருகே ஞாலம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பில் பெயர் மாற்றம் செய்து தர காலதாமதம் செய்து வருவதை கண்டித்து ஒன்றிய கவுன்சிலர் தனது குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த ஞாலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர் இவர் அப்பகுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.இந்நிலையில் ஏசுதாஸ் வீட்டுடன் கூடிய நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். பதிவுக்கு பின்னர் தான் வாங்கிய வீடு மற்றும் அதன் குடிநீர் இணைப்பில் தனது பெயரை இணைத்து மாற்றம் செய்து தர ஞாலம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பெயர் மாற்றம் செய்து வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏசுதாஸ் நேற்று காலை தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் பெற்றோர் என ஆறு பேருடன் சேர்ந்து ஊராட்சி அலுவலகம் வந்தார். பின்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் சதீஷ் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வில்லியம் சந்திரபோஸ், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் அன்ன ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக சம்பந்தப்பட்ட இணையதளம் மூடப்பட்டுள்ளது. மே 15க்குள் திறக்கப்பட்டு விடும். அதன் பின் கோரிக்கையின் படி பெயர் மாற்றி ரசீது போட்டு தரப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதை அடுத்து கவுன்சிலர் ஏசுதாஸ் மற்றும் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story