சாத்தான்குளம் : ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்!

சாத்தான்குளம் : ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்!

ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் 

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றிய தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றிய ஆணையாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவியாளா் சிவா தீா்மானங்களை வாசித்தாா்.

மக்கள் பிரச்னை, அடிப்படை தேவைகள் குறித்து ஒன்றிய கவுன்சிலா்கள் விவாதித்தனா். கூட்டத்தில் 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலா்கள் பிச்சிவிளை சுதாகா், மீனா முருகேசன் ஜோதி, சசிகலா, சுமதி, ஜேசு அஜிட், ப்ரெனிலா காா்மல், மேரி பொன்மலா், செல்வம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், கணேசன், பட்டத்தி, ராதாகிருஷ்ணன், மாசானமுத்து, ரவி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள் ஜெயசங்கா், ராஜேஷ், உதவி பொறியாளா் அருணா, கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story