நாளை மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகை

நாளை மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகை

நாளை மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தரவுள்ளார். 

நாளை மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தரவுள்ளார்.

மதுரைக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 12) மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரவுள்ளார்.

மதுரைக்கு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு மதுரைக்கு விமானம் மூலம் வரும் அமித்ஷா பின் ஹெலிகாப்டர் மூலம் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். ரோடு ஷோவும் நடத்துகிறார். அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மீண்டும் மதுரை வரும் அமித்ஷா மதுரையில் ரோடு ஷோ நடத்துகிறார். பிறகு மீனாட்சி அம்மன் கோவிலில் சென்று அம்மனை தரிசனம் செய்கிறார். அன்று இரவு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார்.

மறுநாள் சனிக்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி சென்று பொன் இராதா கிருஷணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் என்றும் தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags

Next Story