ராமநாதபுரத்தில் 5நிமிடம் மட்டும் நடந்த யூனியன் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் ஐந்தே நிமிடத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கவுன்சிலர்கள் வெளியேறினர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்ட நடைபெற்றது.இக்கூட்டம் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படாமல் ஐந்தே நிமிடத்தில் முடிவடைந்தது. இக்கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் புல்லாணி தலைமை வகித்தார்.துணைத் தலைவர் சிவலிங்கம் மற்றும் வட்டார கிராம ஊராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரி மற்றும் 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்புல்லாணி யூனியனில் எந்த ஒரு திட்டப் பணிகளுக்கும் முன்னுரிமை தராமல் ஓரங்கட்டப்படுவதால் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் யூனியன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் எந்த ஒரு பதிலும் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து கவுன்சிலர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லாத நிலையில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி புதிதாக வந்துள்ள mavatta மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)அவர்களிடம் காண்டிராக்ட் மற்றும் பல்வேறு தவறான செய்திகளை எடுத்துச் சொல்வதால் எந்த ஒரு பணியும் நடக்காமல் திருப்புல்லாணி யூனியன் ஓரங்கட்டப்பட்டு வருகிறது எனவே கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் வருகை பதிவேட்டில் மற்றும் கையெழுத்திட்டு ஐந்தே நிமிடங்களில் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

Tags

Next Story