அதிமுக வேட்பாளருக்கு ஒன்றிய செயலாளர் வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் ஒன்றியம், கொத்தம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் தேமுதிக ஒன்றிய செயலாளர் பச்சமுத்து உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது மின்சார கட்டணம்,பால் விலை,வீட்டு வரி கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்ட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Next Story