குமாரபாளையம் தளபதி ஆட்டோ சங்கம் சார்பில் அலகு குத்தும் விழா
குமாரபாளையம் தளபதி ஆட்டோ சங்கம் சார்பில் அலகு குத்தும் விழா
குமாரபாளையம் தளபதி ஆட்டோ சங்கம் சார்பில் அலகு குத்தும் விழா
குமாரபாளையம் தளபதி ஆட்டோ சங்கம் சார்பில் அலகு குத்தும் விழா நடந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மகாகுண்டம் மற்றும் தேர்த்திருவிழா பிப். 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பிப். 20, மறு பூச்சாட்டுதல், பிப் 24ல் கொடியேற்றம் என தினசரி ஒரு நடந்தது. விழாவின் 15ஆம் நாளில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழா நடந்தது. இதையடுத்து அம்மன் திருக்கல்யாணம், இரண்டு நாட்கள் தேர்த்திருவிழா நடந்தது. குமாரபாளையம் தளபதி ஆட்டோ சங்கம் சார்பில் அலகு குத்தும் விழா நடந்தது. குமாரபாளையம் பஸ்ஸ்டாண்டிலிருந்து கோட்டைமேடு வரை மேள தாளங்கள் முழங்க அலகு குத்தியவாறும், ஆட்டம் ஆடியவாறும், ஊர்வலமாக சென்றனர். சங்க தலைவர் வெங்கிடு என்கிற வெங்கடேசன், செயலர் அழகேசன் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
Next Story