ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய பாஜக அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக, மத்திய பா.ஜ., அரசு எழுதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து, நேற்று காலை ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு விவிசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன், சகாபுதின், மாவட்ட தலைவர் தாண்டவராயன், விவசாய விடுதலை முன்னணி மாநில குழு அம்பேத்கர், அரிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், பாலசுப்பிரமணியன், மூர்த்தி, ஆனந்த், ராமநாதன், கருணாகரன், ஏழுமலை உள்ளிட்ட கூட்டமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
Next Story