திருப்பூரில் திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை!

திருப்பூரில் திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை!

 வழக்குபதிவு

திருப்பூர் ஸ்ரீ நகர் பகுதியில் திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை. திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (44). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருப்பூர் அங்கேரி பாளையத்தை அடுத்த ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஒரு பணியன் நிறுவனத்தில் தங்கி தையல் தொழிலாளியாக நாகராஜ் பணியாற்றி வந்தார். திருமண வயதைக் கடந்தும் இன்னும் திருமணமாகததால் நாகராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை திடீரென நாகராஜ் வேலை பார்த்து வந்த பனியன் நிறுவனத்தின் மாடிக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story