திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை !

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை !

தற்கொலை 

கயத்தாறு அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ெசய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளம் கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சண்முகம் விவசாயி. இவரது மகன் குமார் (37). திருமணம் ஆகவில்லை. இவர், தனது தந்தையுடன் விவசாய வேலை செய்து வந்தார்.

அவருக்கு குடும்பத்தினரும் பல இடங்களில் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு திருமணத்துக்கு பெண் அமையவில்லையாம். இதற்கிடையில், அவர் கடந்த ஒரு மாத காலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டுள்ளார். தனக்கு திருமணம் ஆகாத நிலையில், நோய் பாதிப்பு இருப்பதை நினைத்து மனவேதனையில் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று, தனது தோட்டத்தில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அறையில் படுத்த சிறிது நேரத்தில் அவர் மயங்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து பதறிய குடும்பத்தினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story