உன்னங்குளம் பராசக்தி அம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம்

உன்னங்குளம் பராசக்தி அம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம்

கொடியேற்றத்தில் கலந்து கொண்டவர்கள் 

உன்னங்குளம் பராசக்தி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குருந்தன்கோடு அருகே பிரசித்திபெற்ற உன்னங்குளம் பத்ரமாகாளி பராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பங்குனி திருவிழா இன்று காலை திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

விழாவை முன்னிட்டு தினமும் காலை 6.30 மணிக்கு உஷபூஜை, மதியம் 12 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 5.30 மணிக்கு பஜனை, இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 8ம் நாள் விழாவான வருகிற 25ந் தேதி(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நேர்த்திக்கடனுக்காக விரதமிருக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராட செல்லுதல் நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு உன்னங்குளத்தங்கரையில் அமைந்துள்ள தேவி ஆலயத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்று அம்மனை வேண்டி அலங்கார பூஜை செய்தல் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஈனஇசக்கியம்மன் கோயிலிலிருந்து நேர்ச்சையாளர்கள் ஊர்வலமாக பராசக்தி அம்மன் சன்னதிக்கு வந்து நேச்சைகளை சமர்ப்பித்தல் நடைபெறுகிறது.

9ம் திருவிழாவான 26ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு நேர்ச்சையாளர்கள் கோயிலை சுற்றி அம்மனை வேண்டி அங்கபிரதட்சணம் செய்து உருண்டு வருதலும், பெண்கள் கும்பிட்டு நமஸ்காரம் செய்து அம்மனை வழிபடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு வலியபடுக்கை, மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து குழந்தைகளுக்கான அலகு குத்துதல், சிறுமிகளுக்கு மாவிளக்கு ஏந்தி நேர்த்திகடன் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழா நிறைவு நாளான 27ந் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, காலை 9 மணிக்கு பொங்கல் வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திருக்கொடி இறக்கப்படுகிறது.

Tags

Next Story