அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போராட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திங்கட்கிழமையான இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொன்னாண்டவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டுவரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

நல வாரியங்களை முறைப்படுத்த வேண்டும். மாநில பட்ஜெட்டில் மூன்று சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் சான்று பெறுவதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Read MoreRead Less
Next Story