திருப்பத்தூர் அருகே தீராத வயிற்று வலி: விவசாயி தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் அருகே தீராத வயிற்று வலி: விவசாயி தற்கொலை முயற்சி

கோப்பு படம்


வயிற்று வலியால் விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தகரகுப்பம் கிராமத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி! அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தகரகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளி மகன் பெருமாள் வயது (35) இவர் விவசாயம் செய்துவருகிறார்.

இவர் தீராத வயிற்று வலியினால் அவதி உற்று வந்ததாக கூறப்படுகிறது இன்நிலையில் வயிற்று வலி அதிகமாகவே விவசாய நிலத்திற்கு பயன்படுத்த வீட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்துக்கொண்டு தன்னுடைய நிலத்தின் அருகே சென்று குடித்து மயங்கி உள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story