ஆவடி பேருந்து நிலையத்தில் சுகாதாரக்கேடு
பேருந்து நிலையத்தில் குவிந்துள்ள குப்பைகள்
ஆவடி பேருந்து நிலையத்தில் சுகாதாரக்கேடு நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆவடியில் மாநகர பேருந்து நிலையம் மற்றும் பணிமனை உள்ளது. அங்கிருந்து, சென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும், 50,000 பேர் வரை அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் நுழைவாயில் அருகே, குப்பை தொட்டி நிரம்பி, குப்பை கழிவுகள் வழிந்து, அங்குள்ள மழைநீர் வடிகாலையும் அடைத்துள்ளது. சில நிமிட மழை பெய்தாலும், வடிந்து செல்ல வழியின்றி, மழைநீர் பேருந்து நிலையத்திற்குள் தேங்கி விடுகிறது.
ஒரு மணி நேரம் மழை பெய்தால், பேருந்து நிலையம் குளமாகி விடுகிறது. அதனால், தொற்று நோய் பரவும் ஆபத்தும் உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story