சுகாதாரமற்ற குடிநீர்; மக்கள் குற்றச்சாட்டு

சுகாதாரமற்ற குடிநீர்; மக்கள் குற்றச்சாட்டு

சுகாதாரமற்ற குடிநீர்; மக்கள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு அடுத்த செய்யூர் அருகே, வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட குருவாபதன்மேடு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். ஏரியின் நடுவே அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏரியின் நடுவே உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர், உபரிநீர் வெளியேறும் கலங்கலின் உயரத்தை விட குறைவாக இருப்பதால், மழைக்காலங்களில் ஏரி நீர், குடிநீர் கிணற்றில் நிரம்புகிறது. இதனால், ஏரியில் உள்ள கழிவுகள் தண்ணீரில் கலந்து, செம்மண் நிறத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- ஏரியின் நடுவே அமைந்துள்ள கிணற்றில் இருந்து, எங்கள் கிராமத்திற்கு குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் செம்மண் நிறத்தில், மாசடைந்து இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். துணி துவைப்பது, பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டு உபயோகத்திற்கு கூட இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், குடிப்பதற்கு சுகாதாரமற்ற குடிநீர் இல்லாததால், தனியாரிடமிருந்து பணம் கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இந்த பாதிப்பு ஆண்டுதோறும் மழைக்காலத்தில் நடக்கிறது. அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால், ஏரியில் தண்ணீர் குறைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர். அதன்பின், கண்டுகொள்வதே இல்லை. எனவே, உபரிநீர் வெளியேறும் கலங்கலின் உயரத்தை விட, கிணற்றின் சுற்றுசுவர் 2 அடி உயர்த்தி அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்..

Tags

Next Story