சித்தையன் கோட்டை பேரூராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்
சுகாதாரமற்ற குடிநீர் கிணறு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பேரூராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம், அழகர் நாயக்கன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 1 கி.மீ தூரத்தில் உள்ள தாமரைக் குளத்தில் திறந்த வெளி கிணற்றிலிருந்து குடிதண்ணீர் கடந்த பல ஆண்டுகளாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் தாமரை குளத்தில் திறந்தவெளி கிணறாக உள்ளதால் அந்த கிணற்றில் புழு பூச்சிகள் மிதந்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றி, மலைப்பாம்புகள், காட்டுப் பூனைகள் உள்ளிட்ட வன விலங்குகளும், நாய்களும் கிணற்றில் இறந்து மிதக்கிறது.இந்த கிணற்றுக்கு மூடி அமைத்து பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story