தீண்டாமை வன்கொடுமை விழிப்புணர்வு முகாம்
வடசேரியில் தீண்டாமை வன்கொடுமை விழிப்புணர்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் தீண்டாமை மற்றும் வன்கொடுமை குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள், வன்கொடுமை தடுப்பு சட்டம், தாட்கோ மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான சமுக நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து அனைத்து ஊராட்சி தலைவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், பாபு, கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.கே.கனகராஜ், மாவட்ட சமுகநல அலுவலர் சரோஜினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சாந்தி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் துணை கண்காணிப்பாளர் பா.சந்திரசேகரன், பணிமேற்பார்வையாளர் ஆர்.ஹரிஹரசுப்பிரமணியன், சிறப்பு பேச்சாளர்கள், அனைத்து ஊராட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
Next Story