பயன்படுத்தபடாத அரசு தொடர்பு எண்கள் - முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பயன்படுத்தபடாத அரசு தொடர்பு எண்கள் - முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை 

தர்மபுரி மாவட்டம் பரப்பளவில் 4497,77 ச.கி.மீ கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் 15,06,843 பேரில் பெண்கள் 7,32,540,ஆண்கள் 7,74,303, நகர்ப்புற மக்கள் தொகை 2,60 912, கிராமப்புற மக்கள் தொகை12,45,731, பாலின வாரியாக 946/1000 வசித்து வருகிறார்கள். 479 வருவாய் கிராமங்கள், பாலக்கோடு, பென்னாகரம். தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி,அரூர் என ஐந்து சட்டமன்ற தொகுதிகள், இரண்டு வருவாய் கோட்டங்கள், ஏழு வருவாய் வட்டங்கள், ஏழு வருவாய் உள் வட்டங்கள் ,251 கிராம பஞ்சாயத்துகள், 10 வட்டாரங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தர்மபுரி நகராட்சி ஒன்றும், அரூர், கடத்தூர், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர்,மல்லாபுரம் என பேரூராட்சிகளையும் உள்ளடக்கியது. தர்மபுரி மாவட்ட மக்கள் பல்வேறு துறை அலுவலர்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் மாவட்ட இலவச தொலைபேசி எண், ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை வருவாய்த்துறை வட்டார வளர்ச்சி அலுவலகம், வளர்ச்சி அலுவலர் கைபேசி எண், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலர், துணை இயக்குனர், இணை இயக்குனர், அரசு பொது மருத்துவமனை, முதன்மை மருத்துவ அலுவலர், உதவி கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரின் தரைவழி இணைப்பு எண் மற்றும் அலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளது. அரசு வழங்கிய தொடர்பு எண்கள் அறிவிப்பு பலகைகளில் இடம் பெற்றிருந்தாலும் கூட பொதுமக்கள் அவர்களுடைய குறைகள் மற்றும் அவசர கால செய்திகளை தொடர்பு கொள்வதற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசு தொடர்பு எண்கள் செயல்பாட்டில் இல்லாததால் முக்கிய தகவல்களை பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், உள்ளிட்டோர் தகவல்களை பதிவு செய்வதற்கும் தொடர்பு கொள்வதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மிக முக்கியமாக அனைத்து துறை அலுவலர்களும் அரசு வழங்கிய தொடர்பு எண்களை பயன்படுத்தாமல் தங்களுடைய சொந்த எண்களை அரசு அலுவலர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். அரசு அலுவலர்கள் தங்களுடைய சொந்த எண்களை பயன்படுத்துவதால் முக்கிய அவசர கால நிகழ்வுகள், அவசரகால உதவிகள் தகவல்களை அரசு உயர் மட்ட அலுவலர்களுக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள், இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலர்களுக்கு அரசு வழியாக வழங்கப்பட்டுள்ள தொடர்பு எண்களை மக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும் தகவல்களை பதிவு செய்வதற்கு ஏதுவாக அரசு வழங்கிய தொடர்பு எண்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வருக்கும் தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயன்படுத்தபடாத அரசுத்துறைகளின் தொடர்பு எண்கள் - முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tags

Next Story