அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.பொள்ளாச்சியில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர் கிராந்திகுமார் சென்ற நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் துவங்கியது.இந்த கூட்டத்தில் கோவை மாநகர மேயர் கல்பனா,துணை மேயர் வெற்றி செல்வன்,கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,ஏ.கே.செல்வராஜ்,ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார்,அம்மன் அர்ச்சுணன், கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக ஆட்சியர் கூட்டத்திற்கு முன் ஆட்சியர் பங்கேற்காதது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் கேள்வியெழுப்பினர். இதற்கு பதில் அளித்த பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆனைமலையில் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க சென்றிருப்பதாக கூறவே சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள சூழலில் தாங்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து யாரிடம் கேட்பது யார் பதிலளிப்பார்கள் எனவும் கேள்வியெழுப்பவே துவக்கத்திலேயே கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கூட்டத்தை ஒத்தி வைக்கவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இருப்பினும் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story