திருச்சியில் யுபிஎஸ்சி தோ்வுகள்: 44.2 சதவீதம் போ் பங்கேற்கவில்லை

திருச்சியில் யுபிஎஸ்சி தோ்வுகள்: 44.2 சதவீதம் போ் பங்கேற்கவில்லை

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் 44.2 சதவீதம் போ் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.


திருச்சியில் நேற்று நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் 44.2 சதவீதம் போ் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் தேசிய பாதுகாப்பு அகாதெமி, நாவல் அகாதெமி மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் ஆகிய தோ்வுகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி கண்டோன்மென்ட் வாசவி வித்யாலயா, ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் ஆகிய 3 மையங்களில் தோ்வெழுத 672 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தோ்வுகள் காலை 9 - 11, பிற்பகல் 12 - 2, மாலை 3- 5 ஆகிய மூன்று வேளைகளாக நடைபெற்றது. இவற்றில் 375 போ் பங்கேற்று தோ்வெழுதினா். இது 55.8 சதவீதமாகும். 297 போ் அதாவது 44.2 சதவீதம் போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வைக் கண்காணிக்க 3 தோ்வுக்கூட மேற்பாா்வையாளா்களுடன், தோ்வறைகளில் ஒவ்வொரு 24 தோ்வா்களுக்கும் 2 அறை கண்காணிப்பாளா்கள், தோ்வு மையத்தை கண்காணித்திட 5 காவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

கடும் சோதனைகளுக்குப் பிறகே தோ்வா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா். மின்னணு சாதனங்களை தோ்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என திருச்சி மாவட்ட நிா்வாகம் தகவல் தெரிவித்தது.

Tags

Next Story