அஸ்தம்பட்டியில் ஊரடி ஒத்தஜடா மகா முனியப்பன் கோவில் திருவிழா
விழாவில் கலந்து கொண்டவர்கள்
சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ். நகர் பின்புறம் காயத்ரி நகரில் உள்ள ஸ்ரீஊரடி ஒத்த ஜடா மகா முனியப்பன் கோவிலின் 32-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பொங்கலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழவில் பெண்கள் திரளாக பங்கேற்று மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வந்து முனியப்பனுக்கு பொங்கல் வைத்து பூஜைகள் செய்து, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். விழாவிற்கு தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவரும், கோவில் நிர்வாக குழு தலைவருமான வக்கீல் எஸ்.செல்வம் தலைமை வகித்தார். கோவில் தர்மகர்த்தா கே.பாலாஜி, பொருளாளர் எஸ்.சீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் எம். பி. எஸ்.ஆர்.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
விழாவில் வக்கீல் எஸ்.ஆர். அண்ணாமலை, அஸ்தம்பட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஆர்.சந்தான கோபால், சக்தி நகர் சக்தி வெள்ளை முனியப்பன் கோவில் தலைவர் எஸ்.ஆர். அசோக்குமார், பெருமாள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர்.