ரூ.1.20 கோடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

ரூ.1.20 கோடியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

ஆரம்ப சுகாதார நிலையம்

நாகர்கோவில் மேயர்  அடிக்கல் நாட்டினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வட்ட விளை, தொல்ல விளை, வடசேரி, வடிவீஸ்வரம், கிருஷ்ணன் கோவில் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டவிளை, தொல்ல விளை, வடசேரி ஆகியவற்றில் பிரசவம் பார்க்கும் வசதி உள்ளது. கிருஷ்ணன் கோவில், வடிவீஸ்வரம் சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்க அறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனை தொடர்ந்து இந்த இருநகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த அரசுக்கு கருத்து அனுப்பப்பட்டு, அதன்படி தற்போது பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பெருவிளை கிறிஸ்டோபர் நகரிலும் ரூ. 1.20 கோடியில் பிரசவ அறையுடன் நகர்புற சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய பணியை மேயர் மகேஷ் இன்று அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த மோகன் பொறியாளர் பாலசுப்பிரமணியம் சுகாதாரத் துணை இறை இயக்குனர் மீனாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story