ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் 

சிறுமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்.
சிறுமலையில் வசிக்கும் மக்களின் நீண்ட கால எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிறுமலையில் ஆரம்ப சுகாதார நிலையம்: இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக சுமாா் 30 கி.மீ. பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ஊராட்சி சாா்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டத்திலும், வட்டார பேரவைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டும் தற்போது வரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே, சிறுமலை மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் வகையில், நடப்பாண்டிலேயே ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story