சாலை சீரமைப்பு பணி மந்தம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சாலை சீரமைப்பு பணி மந்தம் விரைந்து முடிக்க வலியுறுத்தல்

சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் சின்ன அய்யங்குளத்தில் இருந்து, ஓரிக்கை பாலாறு பாலம் செல்லும் சாலையில், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்பு வீடுகள் உள்ளன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலை சேதமடைந்த நிலையில் இருந்ததால், இச்சாலை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து லோக்சபா தேர்தலுக்கு முன், சாலை சீரமைப்பு பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டது.

அடுத்தகட்ட பணியை துவக்காமல் சாலை சீரமைப்பு பணியை கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால், இங்குள்ள அரசு துவக்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வரும் மாணவ- --- மாணவியர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஜல்லி கற்களின் மீது செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே, சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story