ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணியை தொடங்க வலியுறுத்தல்!

ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணியை தொடங்க வலியுறுத்தல்!

சேதமடைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 

ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணியை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்து காணப்படும் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணியை அரசு உடனடியாகத் தொடங்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பொன்னமராவதியில் அமரகண்டான் குளத்தின் வடகரையில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் ஆர். கண்டியாநத்தம், பகவாண்டிபட்டி, பாலக்குறிச்சி,

வேகுப்பட்டி, உசிலம்பட்டி, காட்டுப்பட்டி, தூத்தூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகள் பொன்னமராவதி மற்றும் பேரூராட்சி பொதுமக்கள் பொது மருத்துவம் மற்றும் மகப்பேறு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளைப் பெறுகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த நிலையில் உள்ள 89 ஆண்டுகள் பழைமையான இந்தச் சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தினர்.

இதையடுத்து புதிய கட்டடம் கட்ட மத்திய அரசின் 15ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 25 அண்மையில் இதற்கான லட்சம் ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கவில்லை. எனவே, மாற்று இடத்தில் சுகாதார நிலையத்தை இயங்கச் செய்து கட்டடப்பணியை விரைந்து தொடங்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் இந்தச் நிலையத்தில் சிகிச்சையே சுகாதார மகப்பேறு பிரதானமாக இருப்பதால் இங்கு பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும் வலியுத்தியுள்ளனர்.

Tags

Next Story