பயனில்லாத வெற்றுக் காகிதம் வேளாண் பட்ஜெட்; தென்னை விவசாயிகள் விமர்சனம்

பயனில்லாத வெற்றுக் காகிதம் வேளாண் பட்ஜெட்; தென்னை விவசாயிகள் விமர்சனம்
இ.வீ.காந்தி
பயனில்லாத வெற்றுக் காகிதம் வேளாண் பட்ஜெட் என தென்னை விவசாயிகள் விமர்சித்துள்ளனர்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு எந்த பயனும் தராத வெற்று காகிதம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈஸ்ட்‌ கோஸ்ட்‌ தென்னை விவசாயிகள்‌ சங்க தலைவர் இ.வீ.காந்தி கூறியிருப்பதாவது, வேளாண் பட்ஜெட், விளைபொருட்களுக்கு உரிய விற்பனை விலை கிடைக்காமல் அல்லல்படும் விவசாயிகளுக்கு எந்த பயனும் தராத வெற்று காகிதம். திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு என பலவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளது, வேடிக்கையாக உள்ளது. தமிழ் நாட்டில் பல லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் தேங்காய்க்கு, உற்பத்தி செலவுக்குக் கூட கட்டுபாடியாகும் விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதை, தினம் தினம் பலவகை அறப் போராட்டங்கள் மூலம் அரசுக்கு தெரியப் படுத்தியும், அரசு சிறிதும் கண்டு கொள்ளாமல் இருப்பது, பல லட்சம் விவசாயிகளையும், விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தென்னை சாகுபடி அதிகம் செய்யக்கூடிய தஞ்சாவூர், பொள்ளாச்சி பகுதிகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அரசு உணரவில்லை.

சென்ற வருட பட்ஜெட்டில் சொல்லப்பட்ட பேராவூரணி தேங்காய்க்கு புவிசார் குறியீடு என்பதெல்லாம், இன்னும் அதற்கான பணி ஆரம்பிக்கப்படாமலே உள்ளது. பேராவூரணியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்று என இருக்கும் கே.வி.சி (உழவர் பயிற்சி மையம்) தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இல்லாததை பல முறை சுட்டிக் காட்டியும் அரசின் காதுகளுக்கு ஏனோ எட்டவில்லை. இதுபோல் விவசாயிகள் நேரடியாக பயன்பெறக்கூடிய பல கோரிக்கைகளையும் புறந்தள்ளி விட்டு, வெற்று விளம்பரத்திற்காக, ஒவ்வொரு வருடமும், தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதால் யாருக்கு என்ன பயன் கேள்விக்குறிதான்" என்றார்.

Tags

Next Story