புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்காக உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் அஞ்சலி

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்காக உசிலம்பட்டி பள்ளி மாணவர்கள் அஞ்சலி
புதுச்சேரி மாணவிக்கு மௌன அஞ்சலி
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி.

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளி மாணவ மாணவிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி துக்கத்தை அனுசரித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்தும், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, சிறந்த இளைஞருக்கான தமிழக அரசின் விருது பெற்ற சந்திரலேகா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மற்றும் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் மற்றும் மாணவர்களுக்கு டோன் டச் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி துக்கத்தை அனுசரித்தனர்.,

Tags

Next Story