கந்துவட்டி கொடுமை : நகை கடை உரிமையாளர் மீது தாக்குதல்

காரிமங்கலம் பகுதியில் கந்து வட்டி கொடுமையால் நகை கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி அடுத்த காரிமங்கலம் கடைவீதி பகுதியில் பிரபு என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சரோஜினி என்ற பெயரில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த மேற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயா என்பவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்துள்ளார். அவ்வப்போது 10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை வட்டிக்கு கடனாக வாங்கி கொடுத்து வந்துள்ளார். அப்போது கையொப்பமிட்ட வங்கி காசோலை மற்றும் பத்திரங்களையும் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் அனைத்து கடனையும் திருப்பி கொடுத்துவிட்ட பிறகு தான் கொடுத்த வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு ஜெயா தான் வேறு இடத்தில் வைத்துள்ளேன் எனவும், 20 நாட்களுக்குள் நகை கடைக்கு வந்து கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று கடைக்;கு ஜெயா மற்றும் அவரது இரு மகன்கள் அடியாட்களுடன் வந்து 5 கோடி தரவேண்டும் என தகரா றில் ஈடுபட்டுள்ளார். நீங்கள் கொடுத்த பத்திரங்கள் மற்றும் காசோலை தன்னிடம் உள்ளது என்றும், பணம் கொடுக்க வில்லையெனில் கொன்று விடுவேன் எனவும், தான் ஆளும் கட்சியில் பொறுப்பில் உள்ளதாகவும், எங்கு சென்றாலும் நான் பார்த்து கொள்கிறேன் என மிரட்டியும், தகாத வார்த்தையில் பேசி தான் கொண்டு வந்த செல்போனில் பிரபின் தலை மீது பலமாக தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த பிரபுவை நகை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கந்து வட்டி கொடுமையால் பல குடும்பங்கள் சீரழிந்து போன நிலையில் மீண்டும் கந்து வட்டி கொடுமை தலை தூக்கி வருவது வேதனை அளிக்கிறது. இதனை மாவட்ட நிர்வாகம் மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபுவை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story