டிச.7 வரை உதகை மலை ரயில் சேவை ரத்து

டிச.7 வரை உதகை மலை ரயில் சேவை ரத்து

உதகை மலை ரயில் 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக குன்னூர் மற்றும் பர்லியார் மலை பகுதியிலும், வெலிங்டன், லவ்டேல் பகுதிகளிலும் ரயில் தண்டவளத்தில் மண் மற்றும் மரங்கள் விழுந்துள்ளன. ஏற்கனவே மேட்டுபாளையம் - குன்னூர் இடையே தண்டவளத்தில் மண் மற்றும் பாறைகள் விழுந்ததால் 25-ந்தேதி வரை ரத்து செய்யபட்டிருந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் குன்னூர் - மேட்டுபாளையம் இடையே தண்டவாளத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க இன்னும் அதிக நாட்கள் ஆகும் என்பதால் மேட்டுபாளையம் - குன்னூர் - உதகை இடையே இயக்கபடும் மலை ரயில் சேவை டிசம்பர் 7-ந்தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளது. அதே போல குன்னூர் - உதகை இடையே வெலிங்டன் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளதாலும் கன மழை எச்சரிக்கை காரணமாகவும் உதகை - குன்னூர் இடையே ஆன மலை ரயிலும் இம்மாதம் 30-ந்தேதி வரை ரத்து செய்யபடுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story