திருப்பூர்: அதிமுக நிர்வாகி காரில் இருந்த பாத்திரங்கள் பறிமுதல்

திருப்பூர்: அதிமுக நிர்வாகி காரில் இருந்த பாத்திரங்கள் பறிமுதல்

அதிமுக நிர்வாகி காரில் இருந்து பத்திரம் பறிமுதல் 

திருப்பூரில் அதிமுக நிர்வாகி காரில் இருந்த பாத்திரங்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் , அணைப்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளருமான குணசேகரனுக்கு சொந்தமான காரில் பாத்திரங்கள் இருந்ததை தொடர்ந்து அதனை சோதனை செய்ய அதிகாரிகள் நிறுத்தினர்.

ஆனால் காரில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த பாத்திரங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 20 பாத்திரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் ‌.

Tags

Next Story