உதகை அரசு தாவரவியல் பூங்கா: 28.20 லட்சம் பேர் வருகை
பூங்காவை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
உதகை அரசு தாவரவியல் பூங்காவை கடந்த 2023-ம் ஆண்டு 28 லட்சத்தி 20 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுமே தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்து செல்லாமல் இருக்க முடியாது. 5 லட்சம் மலர் நாற்றுக்களை கொண்டு பல்வேறு மலர் மலர்ச்செடிகள் இங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும் வானுயர்ந்த மரங்கள், கண்ணாடி மாளிகை, புல் மைதானம் உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த பகுதிகளாகும். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த பூங்காவை 28 லட்சத்து 20 ஆயிரம் பேர் கண்டு ரசித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story