சிறுபினாயூரில் நெல் விளைச்சல் அமோகம்

சிறுபினாயூரில்  நெல் விளைச்சல் அமோகம்

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் 

சிறுபினாயூர் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சிறுபினாயூர் கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு கட்டுப்பாட்டின் கீழ், 300 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், இந்த தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் உள்ள 600 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும். அதன்படி, இந்தாண்டு பருவ மழைக்கு சிறுபினாயூர் ஏரி முழுமையாக நிரம்பியது. அதை தொடர்ந்து, அப்பகுதியில் சம்பா பருவ சாகுபடிக்கு, 500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். தற்போது, அப்பயிர்கள் செழுமையாக வளர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் இப்பயிர்கள் அறுவடை செய்ய உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்."

Tags

Next Story