உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டம்: நாயுடு சங்கம் ஆதரவு
நாயுடு சங்க தலைவர்
டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் குறைந்த பட்ச கட்டுப்படியான ஆதார விலை நிர்ணயம் செய்ய கேட்டும், விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரியும்,
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சீர்திருத்த சட்டம் 2020ஐ திரும்ப பெற கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றி கொடுக்க கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அரியானா பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் மத்திய பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகிறது, இதனை கண்டித்து நேற்று 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, டெல்லி எல்லை பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் அனைத்து விவசாய சங்கத்தினரும் கலந்து கொண்டு நடத்தப்பட்டதை போல் தமிழகத்திலும் விவசாயிகள் சங்கம் மூலம் ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். டெல்லி எல்லை பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, மத்திய பாஜக அரசு உடனடியாக அவற்றை நிறைவேற்ற வேண்டும்,
அவ்வாறு நிறைவேற்றாமல் புறக்கணித்து காலம் தாழ்த்தினால், தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லி எல்லை பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்தில் இருந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்த மிகப்பெரிய்யளவில் விவசாயிகளை அழைத்து கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என இந்த அறிக்கையின் மூலம் மத்திய பாஜக அரசை மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.