உத்திரமேரூர் : மழையால் நெல் அறுவடை பணி பாதிப்பு
அறுவடை பணிகள் பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்தில் கிணற்றுப் பாசனத்தின் வாயிலாக குறிப்பிட்ட சில பகுதிகளில் சம்பா பருவ சாகுபடிக்கு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். சொர்ணவாரி பருவத்தை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தில் நடவு செய்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், சில தினங்களாக பெய்யும் பருவ மழையால், அப்பயிர்கள், விவசாய நிலத்தில் சாய்ந்து காணப்படுகின்றன. நெல் பயிரிட்ட விவசாய நிலங்களில், மழைநீர் தேங்கியும், நிலங்களில் ஈரப்பதம் அதிகமாகவும் உள்ளது. இதனால், அறுவடை பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் நிலத்தில் சாய்ந்த நெல்மணிகள் முளைத்து வீணாக கூடும் என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story