உத்திரமேரூர் பகுதியில் அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

உத்திரமேரூர் பகுதியில் அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

உத்திரமேரூர் சுற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அரசு பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு கிராமங்களில் பல்வேறு நல திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை இன்று காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரமேர் பகுதியில் செயல்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியினை பார்வையிட்டு சுகாதார குடிநீர் கிடைக்கும் வகையில் உபகரணங்கள் பொருத்தி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் கால்நடை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் இருப்புகளை சோதனை மேற்கொண்டார். மருந்துகளை பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தாமல் இரண்டு இருந்ததை கண்டு உடனடியாக இனிவரும் காலங்களில் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார். இதனால் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் குளிர்பான தொழிற்சாலை பார்வையிட்டு வங்கி கடன் பெற்றது மற்றும் செலுத்துதல் முறை குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து ராவத்தநல்லூர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் குழுக்கள் தயாரிக்கும் கடலை எண்ணெய் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். உத்திரமேரூர் பால்குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு செய்து கடந்த காலத்தை போல் செயல்படாமல் பொருட்கள் அனைத்தும் உரிய நேரத்தில் பொதுமக்களை சென்றடையும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இது மட்டுமில்லாமல் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பால் தரமானதாக இருக்கும் வகையில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்கான நவீன இயந்திரங்களை பெற்று பயன்படுத்த அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, ஆட்சியர் கலைச்செல்வி மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி , வட்டாட்சியர் கருணாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story