உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பரம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பரம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடிஉத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பர பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பரம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தெருவடைத்தான் சப்பரத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தெருவடைத்தான் சப்பரம்

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

தெருவை அடைத்து கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர்.சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷபவாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் திருச்செங்காட்டங்குடி,திருமருகல், புதுக்கடை ,திருப்புகலூர், திருக்கண்ணபுரம், கீழப்பூதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story