திருப்பூரில் உழைப்பாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருப்பூரில் உழைப்பாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், வடக்கு மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விளிம்பு நிலையில் உள்ள போயர் சமுதாய மக்கள் கல்வி வேலை வாய்ப்பு அரசியலில் பங்குபெறும் வகையில் சம வாய்ப்பு ஆணையத்தை அமைத்து சட்டநாதன் கமிஷன் பரிந்துரைப்படி போயர் ஜாதியினருக்கு எட்டு சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கிய கோரியும் கட்டுமான நலவாரிய ஓய்வூதியம் 1000 ஆக வழங்குவதை புதுடெல்லி அரசனது 3000 ஓய்வூதியமாக வழங்குவது போல தமிழக அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களில் வீடு இல்லா போயர் சமுதாய மக்கள் கணக்கெடுப்பு நடத்தி வீடற்ற மக்களுக்கு வீட்டு மனை பட்டாவை அரசே பகிர்ந்து அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.