சமத்துவபுரத்தில் காலியாகவுள்ள வீடு -விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

சமத்துவபுரத்தில்  காலியாகவுள்ள வீடு -விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
X
சமத்துவபுரம் வீடு
பூதலூர் ஊராட்சி ஒன்றியம், புதுக்குடி ஊராட்சியில் காலியாக உள்ள சமத்துவபுர வீட்டிற்கு தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம், புதுக்குடி ஊராட்சி, புதுக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், இதரர் வகுப்பினைச் சார்ந்த பயனாளிக்கு ஒரு வீடு மட்டும் காலியாக உள்ளது. இந்த சமத்துவபுர வீட்டிற்கு பூதலூர் ஊராட்சி ஒன்றியம், புதுக்குடி ஊராட்சியிலிருந்து தகுதியான, மேற்குறிப்பிட்ட வகுப்பினைச் சார்ந்த, வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் வீடற்ற தகுதியுள்ள பயனாளிகள் இசைவு கடிதம், ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பூதலூர் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (வ.ஊ)-க்கு 30.12.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை குடும்பத்தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினர், ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், துணை இயக்குநரால் (சுகாதாரப்பணிகள்) சான்றளிக்கப்பட்ட எச்.ஐ.வி, எய்ட்ஸ், டிபி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், மன ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர்கள், ஏழை மக்கள் பங்கேற்புடன் கூடிய ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தஞ்சாவூர் தொலைபேசி எண்- 04362 231190 அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected] இல் தொடர்பு கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story