விவசாயிகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்து விழிப்புணர்வு முகாம்
தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கால்நடை மருத்துவமனையில் தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி விவசாயிகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கால்நடை மருத்துவமனையில் தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி விவசாயிகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்து விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் வேளாண்மை பயிலும் இறுதி ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் கால்நடை மருத்துவர் பழனி, சிறப்பு உரை ஆற்றினார்.
உதவியாளர் மார்டின், மாணவிகள் காவியா,ஜிவஸ்ரீ காவியா. லலிதாம்பாள்,லாவிண்யா .ஜோனா,காவியா ஸ்ரீ,லோகேஸ்வரி கீர்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story