புருசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாம்

புருசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாம்

மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் புருசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமானது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் புருசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமானது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசிய ஒருமுறை செலுத்திக்கொண்டால் கிடேரி கன்றுகளுக்கு ஆயுள் முழுவதற்கும் ஆன நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும் . தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட உள்ளது .

காளை கன்றுகளுக்கும் சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது . எனவே 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு புருசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசினை செலுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story