ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு தடுப்பூசி முகாம்

ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம்

சேலத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 114 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தபட்டது.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் நடப்பாண்டு மாநிலம் முழுவதிலும் இருந்து அரசின் சார்பில் 6,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். சேலத்தில் ஹஜ் கமிட்டி சார்பில் 114 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஹச்பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தடுப்பூசி போடும் முகாம் நேற்று சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார். முகாமில் ஹஜ் பயணம் மேற்கொள்வர்களுக்கு ரத்த அழுத்தம், இசிஜி, உடல் உறுதித் தன்மை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போலியோ மற்றும் மினி கோகார்பெட் தடுப்பூசியும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக பருவகால தொற்று தடுப்பூசியும் போடப்பட்டது. தற்போது இந்த முகாமில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் வரும் மே 24 முதல் ஒவ்வொரு சுழற்சியாக, ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Tags

Next Story