சேத்துப்பட்டில் வாச்சாத்தி வழக்கு வெற்றி பேரவை கூட்டம்
வாச்சாத்தி வழக்கு வெற்றி பேரவை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் சேத்துப்பட்டு சுதந்திர போராட்ட வீரர் தகைசால் தமிழர் சங்கரய்யா அறிவரங்கம் கட்டிடத்தில் "வாச்சாத்தி வழக்கு வெற்றி பேரவை கூட்டம்" நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பழங்குடி நல வாரிய ஆன்றோர் மன்ற உறுப்பினருமான இரா. சரவணன் "வாச்சாத்தி வழக்கும் வெற்றியும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு உடனடியாக பழங்குடி சான்று வழங்கிட வேண்டும் என்றும், காட்டு நாயக்கன் பழங்குடி மக்களுக்கு அடிப்படை தேவைகளான வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு, குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு வசதிகள் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு முதல்வர்க்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காட்டு நாயர்கள்பழங்குடி மக்கள் ஒருங்கிணைப்பாளர் எஸ். பழனி ஒருங்கிணைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாநில தலைவராக எம் .சசிகலா பழனி, மகளிரணி தலைவியாக கௌரி , மகளிர் அணி செயலாளராக பார்வதி மாநில துணை செயலாளராக . விக்னேஷ், மாநில துணை தலைவராக உமா மாநில குழு உறுப்பினர்களாக வேலு, அண்ணாமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேத்பட் வட்டார செயளாலர் .எல்லப்பன்,தமுஎகச சேத்பட் வட்டார செயலாளர் பெரு.தங்கமணி, காட்டுநாயக்கன் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன்,முருகன்,ஆனந்தன்,ஏழுமலை,சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட ஆகிய பகுதிகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் இப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் எம்.தயாளன் நன்றி கூறினார்.