மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மணப்பாறையில் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, வேப்பிலை சாய்பாபா கோயில் அறக்கட்டளை மற்றும் இளையநிலா ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 7-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. போட்டியை வருவாய்க் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி தொடக்கி வைத்தாா்.

களத்தில் இறங்கிய 14 காளைகளை 126 வீரா்களில், மாடு ஒன்றிற்கு 9 வீரா்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கினா். வடத்தில் கட்டப்பட்ட பல காளைகள் வீரா்களை கலங்கடித்தன. காளையை அடக்கிய வீரா்களின் அணிக்கும், வென்ற காளைக்கும் ரூ.8000/- பரிசளிக்கப்பட்டது.

பரிசுகளை அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா் வழங்கினாா். நிகழ்வில் அதிமுக நகரச் செயலா் பவுன் எம். ராமமூா்த்தி, மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் என்.சேது, எம். செல்வராஜ், பிவிகே பழனிச்சாமி, அன்பரசன் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பாபா கோயில் டிரஸ்டிகள் டி. சுரேஷ்குமாா், எல். எத்திராஜ், சண்முகம், பி.பி. பாஸ்கா், கே.எஸ்.எம். இருளப்பன், உசேன், என். வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் காவல் ஆய்வாளா்கள் ஜெ.கே.கோபி, ஏ.பிரபு ஆகியோா் தலைமையில் காவலா்கள் ஈடுபட்டனா்.

Tags

Next Story