வடக்காலத்தூர் சிதம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

வடக்காலத்தூர் சிதம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூர் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூர் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி ஞாயிறு காலை அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை தொடங்கியது அதைத் தொடர்ந்து 22ம் தேதி மாலை அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம் நடைபெற்று யாகசாலை பரவேசம் நடைபெற்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 23ஆம் தேதி காலை மருந்து முகூர்த்தம் மற்றும் மருந்து சாத்துதல் நடைபெற்று இரண்டாம் கால யாக சாலை பூஜையும்,இரவு தம்பதி பூஜை , லஷ்மி பூஜை, நடைபெற்று மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது நேற்று காலை கோ பூஜை நடைபெற்று நான்காம் கால பூஜை நடைபெற்றது அதை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு மஹாபிஷேகமும் ,சுவாமிகள் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story