வடக்காலத்துர் முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா     

வடக்காலத்துர் முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா     

 நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் 

கீழ்வேளூர் அருகே வடக்காலத்துர் முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.    

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வடக்காலத்தூரில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக பிள்ளையார் கோவில் குளத்தில் இருந்து காப்பு கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்

Tags

Next Story