வடகரையாத்தூர் மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா
பரமத்தி வேலூர் அருகே உள்ள வடகரையாத்தூர் மாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
பரமத்தி வேலூர் தாலுகா வடகரையாத்தூர் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 31 ஆம் தேதி கம்பம் நடுவிழாவுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 ஆம் தேதி சனிக்கிழமை இரவு வடிசோறு நிகழ்ச்சியும்,8 ஆம் தேதி இன்று காலை முப்போட்டு மாவிளக்கு நிகழ்ச்சியும்,அலகு குத்துதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தீமிதி விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்ப்பட்டோர் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இரவு 9 மணிக்கு வள்ளி கும்மி ஆட்டம் நடைபெறுகிறது. 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை மாவிளக்கு நிகழ்ச்சியும், இரவு வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி புதன்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும்,பிற்பகல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story