கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சுவிரட்டு 

திருப்புவனத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே புதூரில் ஸ்ரீ பூமாரியம்மன் ரேணாகாதேவி மாசி உற்சவத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 காளைகள் களமிறக்கப்பட்டன. வட்டமான மைதானத்தின் நடுவே ஒவ்வொரு காளைக்கும், 9 காளைகயர்களை கொண்ட குழுவினர் 20 நிமிடத்தில் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், வீரர்கள் திட்டமிட்டு காளைகளை நேர்த்தியாக அடக்க முயன்றனர். இதில் 12 காளைகளை பிடித்து மாடு வீரர்கள் தங்களது வீரத்தை பறை சாற்றினர். போட்டியில் காளையை தழுவிய வீரரின் மீது காளை விழுந்ததால் படுகாயமடைந்தார். போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும்காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பரிசும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இதனை திருப்புவனம், திருப்பாசேத்தி, பூவந்தி, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

Tags

Next Story