செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

மஞ்சு விரட்டு போட்டி 

செம்பனூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டியில் 17 காளைகள் பங்கேற்றன.

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரில் கோயில் திருவிழாவினை முன்னிட்டு 3ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 காளைகளும், ஒரு அணிக்கு 9 பேர் வீதம் 153 வீரர்களும் கலந்து கொண்டனர்.

வட்டமான அமைக்கப்பட்ட திடலில் நடுவே கயிற்றில் கட்டப்பட்ட காளையை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்தில் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் துடிப்புடன் சீரி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் போராடி அடக்கி பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்களும், ரொக்க பரிசும் விழா குழுவினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் காளைகள் முட்டியதில் 5 வீரர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. போட்டியினை கல்லல், செம்பனூர், ஆலவிலாம்பட்டி மதகுபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Tags

Next Story