ஓம் நமோ நாராயணா என கோஷம் முழங்க சுவாமி தரிசனம்
சௌந்தரராஜ பெருமாள்
திண்டுக்கல்லில் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் வலம் வந்து அருள் பாலித்தார்.
திண்டுக்கல்லில் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவில் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் நாகல் நகர் மற்றும் பாரதிபுரம் பகுதியில் எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கமாகும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்த திருவிழா பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பாரதிபுரம் மற்றும் நாகல் நகர் பகுதிகளில் சௌந்தரராஜ பெருமாள் நகர வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஓம் நமோ நாராயணா என கோஷம் விண்ணை முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு மண்டபடியாக எழுந்து அருளினார். பக்தர்களுக்கு மண்டகப்படிதோறும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story