வடதோரசலூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

வடதோரசலூர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கட்டி 25 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களிடம் நிதி திரட்டி கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. கோவில் முன் பிரகாரம் சப்பனிடப்பட்டது. இதையடுத்து நேற்று கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கி, யாகசாலை பூஜையுடன் நடந்தது. சிவாச்சாரியார் நாகராஜ் குருக்கள் வேத மந்திரங்கள் ஓத பூஜைகளை நடத்தினார். காலை 11:40 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

Tags

Next Story